திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
திரைத் துறையிலும் பல சாதனைகள் படைத்த அந்த மூத்த கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்த் திரையுலகத்தினர் சேர்ந்து நாளை ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 5 மணிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.