கேரளா மாநிலத்தில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான மழை பெய்து வருகிறது. பல அணைகள் நிரம்பி வழிந்து திறந்துவிடப்பட்டுள்ளதாலும் கேரளாவில் உள்ள 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், இழப்பை சீர் செய்வதற்காகவும் முதலமைச்சர் பினராயி விஜயன், நிவாரண உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் 25 லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
கேரள ரசிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பை அளித்து ஆதரவு அளித்து வருகின்றனர். அன்புடன் பழகும் அந்த மக்களுக்காக சூர்யா, கார்த்தி ஆகியோர் உடனடியாக நிவாரண உதவியை வழங்குகின்றனர்.
“கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம்வருந்துகிறோம், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிரார்த்திக்கிறோம்,” என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.