2014ம் ஆண்டு முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகில் பல ஏற்றங்களும், இறக்கங்களும் இருந்தாலும் சில சுவாரசியங்களும் நடைபெற்றுள்ளன.
அந்த விதத்தில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவை ‘வி’ என்ற முதல் எழுத்தில் ஆரம்பிக்கும் நடிகர்களின் ஆட்சிதான் மேலோங்கியிருக்கிறது. விஜய்யில் தொடங்கி விஜய் வசந்த் வரை இந்த ‘வி’ நடிகர்கள் நடித்துள்ள படங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது…அவற்றில் சில…
விஜய் நடித்துள்ள படங்கள்…
1. ஜில்லா
2. கத்தி
விஷால்
1. நான் சிகப்பு மனிதன்
2. பூஜை
விஜய் சேதுபதி
1. ரம்மி
2. பண்ணையாரும் பத்மினியும்
3. வன்மம்
விக்ரம் பிரபு
1. அரிமா நம்பி
2. சிகரம் தொடு
3. வெள்ளக்கார துரை
விமல்
1. மஞ்சப் பை
2. நேற்று இன்று
3. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
விஷ்ணு விஷால்
1. முண்டாசுப்பட்டி
2. ஜீவா
விதார்த்
1. வெண்மேகம்
2. பட்டய கிளப்பணும் பாண்டியா
3. ஆள்
4. காடு
வைபவ்
1. டமால் டுமீல்
2. நீ எங்கே என் அன்பே
3. கப்பல்
விஜய் வசந்த்
1. என்னமோ நடக்குது
2. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்
ஆகியோர் நடிக்க மொத்தம் 24 படங்கள் வெளிவந்துள்ளன.
அவர்களோடு நகைச்சுவை நடிகர்களான வடிவேலு நாயகனாக நடித்த ‘தெனாலிராமன்’, விவேக் நாயகனாக நடித்த ‘நான்தான் பாலா’, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’, வினய் நடித்த ‘அரண்மனை’, வர்ஷன் நடித்த ‘அது வேற இது வேற’, அறிமுக நடிகர்கள் விவேக் ராஜகோபால் நடித்த ‘ஒரு மோதல் ஒரு காதல்’, விவிந்த் நடித்த ‘இருக்கு ஆனா இல்ல’, வினய் கிருஷ்ணா நடித்த ‘1 பந்து 4 ரன் ஒரு விக்கெட்’, வீரா நடித்த ‘மொசக்குட்டி’, வெங்கடேஷ் நடித்த ‘ஒரு ஊர்ல’, விஜித் நடித்த ‘யாவும் வசப்படும்’ என மற்ற ‘வி’ நடிகர்கள் நடித்த படங்களும் வெளிவந்துள்ளன.
இப்படி ஒரு சுவாரசியமான விஷயம் இதுவரை தமிழ்த் திரையுலகில் நடந்திருக்க வாய்ப்பில்லை, இது ஒரு ஆச்சரியமான விஷயம்.
