இளைஞர்களை அழைக்கும் ‘மூணே மூணு வார்த்தை’…

Moone Moonu Varthai - Gallery_00001கேப்பிட்டல் பிலிம் வொர்க்ஸ் – எஸ்.பி.சரண் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன், அதிதி செங்கப்பா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், லட்சுமி, வெங்கி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மூணே மூணு வார்த்தை’.

வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும் என இளைஞர்கள் நினைக்கும் காலம் இது. தங்களது திறமையை இவ்வுலகிற்கு நிரூபிக்க முற்படும் இரண்டு இளைஞர்களை மையமாகக்கொண்ட கதைதான் ‘மூணே மூணு வார்த்தை’.

“பெரியதாக சாதிக்க என்னும் இரு இளைஞர்கள், அவர்கள் எடுத்து வைக்கும் முதல்படி அதைத் தொடர்ந்து அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளை இளைஞர்களைக் கவரும் வகையில் காமேடியோடு சொல்லியிருக்கோம். இப்படத்தில் எதையும் பெரிதாக நினைக்காத, சோம்பேறித்தனத்தின் உருவாக அர்ஜுன் மற்றும் ‘சுட்டகதை’ புகழ் வெங்கி, அதிதி என இளமை பட்டாளத்துடன் SP.பாலசுப்ரமணியம் சார், லக்ஷ்மி மேடம் ஆகியோரும் நடிக்கிறார்கள். SPB சார், லக்ஷ்மி மேடம் தமிழில் இணையும் முதல் படம் இது. சுருக்கமாக மூன்று வார்த்தைல சொல்லனும்னா படம் உங்களை மகிழ்விக்கும், ”என்கிறார் மதுமிதா.

படத்தில் அனைத்துதொழில் நுட்பக் கலைஞர்களும் அறிமுகமே. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்கியது மிகவும் புதுமையான அனுபவமாய் இருந்தது. மனித உறவுகளை மேம்படுத்தும் பல சொற்றொடர்கள் மூணே மூணு வார்த்தையாகத்தான் இருந்து வருகிறது என்பது நான் அறிந்த உண்மை. இதையே நான் தலைப்பாக வைத்திருக்கிறேன்.”

சமீபமாக, கல்லூரி மாணவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கலை ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எங்கள் படத்தின் மூலம் அவர்கள் தங்களது ‘மூணே மூணு வார்த்தை’ அனுபவத்தை வீடியோ பதிவாக அனுப்பினால், அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீடியோக்களை படத்தின் இறுதியில் காட்ட உள்ளோம். இவ்வீடியோ அவர்களின் காதல், கல்லூரி, நட்பு, நகைச்சுவை என அவர்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கலாம். அவர்களுக்கு எங்களால் முடிந்தவரை திரையுலகில் வாய்ப்புகள் அமைத்துத் தரவும் தயாராக உள்ளோம். 2015 ஆண்டின் துவக்கத்தில் நாங்கள் உவகையோடு உச்சரிக்கும் மூன்றெழுத்து வார்த்தை ‘Happy New year” என்கிறார் இயக்குனர் மதுமிதா.

Read Previous

Yennai Arindhaal – Official Trailer

Read Next

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்