‘அதையும் தாண்டி புனிதமானது’ என்பது எது ?

வேல்ஸ் மூவீஸ் பேனர் சார்பில் பழனிவேல் தயாரிக்க, வெங்கட்டரமணன் எழுதி இயக்கும் படம் ‘அதையும் தாண்டி புனிதமானது’.

சினிமா மேல் தணியாத ஆசை கொண்ட, சமூகத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் சிலர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள், விவசாயிகள் சிலரும் இப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

புதுமுகங்கள் ஜெய், கெளதம், வீன்ஷெட்டி, ஹேமா, சஞ்சனா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகின்றனர். வேதா செல்வம் ஒளிப்பதிவாளராகவும், ராஜேஷ்கண்ணன் எடிட்டராகவும் , வி.கே.கண்ணன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த திரைப்படத்தின் பாடல்களை வைரபாரதி ,வெங்கடசுப்பு, நாக முருகேசன் எழுதி உள்ளனர்.

‘அப்பா…வேணாம்பா’ என்ற சமூக நலன் சார்ந்த படத்தை இயக்கியவர்தான் வெங்கட்டரமணன்.

கணவன், மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவு பற்றி பேசும் இந்தத் திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டது.

நாகரிகத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் நட்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண், பெண் உறவுகள் தவறாகப் போனால் குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்ற வித்தியாசமான கதைக் களத்தை துணிந்து தொட்டிருக்கிறாராம் இயக்குனர்.

செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாக உள்ளது.

Read Previous

விஜய் டிவி – சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்

Read Next

‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்