‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’, ஒரு ரொமான்டிக் காமெடி

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் ஜானகிராமன் இயக்கியிருக்கும் படம் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’.

இந்தப் படத்தில் கலையரசன், ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மதுமிதா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இயக்குனர் ஜானகிராமன் இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.

‘தெகிடி, சேதுபதி’ படங்களுக்கு இசையமைத்த நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பல்லு ஒளிப்பதிவையும், ராம் பிரசாத் கலை இயக்கத்தையும், ராதாகிருஷ்ணன் தனபால் படத் தொகுப்பையும் செய்கிறார்கள்.

“ஒரு முழு நீள காமெடி திரைப்படமாக இருந்தாலும், படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அவர்களது வாழ்க்கையுடன் இப்படத்தை சம்பந்தப்படுத்திப் பார்ப்பார்கள். அதுவும் கிளைமாக்சில் வரும் சில திருப்புமுனைகள் இதுவரை வந்துள்ள ‘ரொமான்டிக் காமெடி’ படங்களில் இல்லாத அளவிற்கு இன்ப அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருக்கும்” என்கிறார்கள் படக்குழுவினர்.

சேட்டன், தேவதர்ஷினி, சுதா ஆகியோருடன் இயக்குனர் பாலாஜிமோகன், நடிகை காயத்ரி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

87 வயதிலும் சாருஹாசன் தந்த அதிரடி நடிப்பு

Read Next

‘எழுமின்’ படத்திற்காக பாடல் எழுதிய நடிகர் விவேக்