ஆனந்தி, சிம்ரன்…அடுத்து மனிஷா…

கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜெ.ஜெயகுமார் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார், ‘கயல்’ ஆனந்தி மற்றும் பலர் நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’.

சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் ‘வழக்கு எண் 18/9′ பட அறிமுக நாயகி மனிஷா யாதவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தள்ளார்.

‘ ஜி.வி. பிரகாஷ் ஒரு நல்ல இசை அமைப்பாளர் மட்டுமல்ல, நடிகரும் கூடத்தான் என்பதை மூன்றே நாட்களில் புரிந்து கொண்டேன். இயக்குனர் ஆதிக் பொறுமையாக எனக்கு காட்சிகளை விளங்க வைத்து சிறப்பாக நடிக்க உதவி புரிகிறார். அவரது இயக்கம் தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

சிம்ரன் மேடம் அவர்களின் தீவிர ரசிகை நான். அவர் நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். வரும் நாட்களில் அவரை சந்திப்பேன் என்று நம்புகிறன். அவரைப் போலவே பெயர் வாங்க வேண்டும் என்பதே என் லட்சியம். அந்த லட்சியப் பயணம் இந்தப் படம் மூலம் ஆரம்பமாகும் என்பதில் தீவிர நம்பிக்கையாக இருக்கிறேன்,” என்கிறார் மனிஷா.

Read Previous

நியூயார்க்கில் படமாகும் ‘இதயம் முரளி’…

Read Next

‘CSK’ எனக்கு முக்கியமான படம் – ஷரண்