எஸ்எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சத்தியமூர்த்தி இயக்கத்தில் சரண், மிஷால், ஜெய் குஹேனி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’.
இந்தப் படத்தின் நாயகர்களில் ஒருவராக நடித்துள்ள ஷரண் படம் பற்றிய அவரது அனுபவத்தைத நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
‘சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ எனக்கு மிக முக்கியமான திரைப்படம். ‘இனிது இனிது’ திரைப்படத்திற்கு பிறகு நண்பர்கள் சிலர் மீண்டும் இப்படத்தில் நடிக்கிறோம். விமல் மற்றும் நாராயண் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருமே நண்பர்கள்தான். ஒரு கிரிக்கெட் மேட்ச் பாக்குற மாதிரி சந்தோஷமாக இருந்தது.”
“ இந்த படத்தில் நான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் ஆடத் துடிக்கும் ஒரு கிரிக்கெட் வீரராக சார்லஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குனர் சத்தியமூர்த்திக்கு நன்றி. இந்த நொடியை வாழ வேண்டும் என்று என்னும் ஒரு கதாபாத்திரம். ஒரு கிரிக்கெட் வீரராக இருக்க எனக்கு மிக எளிமையாக இருந்தது. அனைவரும் பிடிக்கும் ஒரு காதல் பகுதியும் இப்படத்தில் இருக்கிறது”
“ CSK படம் ஒரு T20 மேட்ச் மாதிரி இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக செல்லும் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும். மார்ச் 27 ஆம் தேதி ‘CSK’ திரைப்படம் வெளிவருகிறது. அப்போது இந்திய அணியும் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் என நம்புகிறேன்,” என்கிறார் ஷரண்.