ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ‘காஞ்சனா 2’ படம் நேற்று தெலுங்கில் வெளியானது.
ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எண்ணற்ற திரையரங்குகளில் ‘கங்கா’ என்ற பெயரில் வெளியான இப்படம் அங்குள்ள ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது.
தமிழிலும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், தெலுங்கிலும் மிகப் பெரிய வசூலை அள்ளும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.