சிங்கப்பூரில் ‘சிங்கிள்’ ஆக வரும் ‘ரஜினி முருகன்’…

‘ரஜினி முருகன்’ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ ரசிகர்களின் ஆவலை நிறைவேற்ற சிங்கப்பூரில் ‘சிங்கிள்’ ஆக வருகிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ படத்தில் இமான் இசையில் இடம் பெற்றுள்ள ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…’ என்ற பாடலை வரும் 29ம் தேதியன்று சிங்கப்பூரில், சன் டெக் சிட்டியில் நடக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் வேர்ல்ட் டூரில் வெளியிட உள்ளார்கள்.

சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம், இசையமைப்பாளர் இமான் ஆகியோரின் கூட்டணியில் முதலில் வந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணி மீது ரசிகர்களிடம் எப்போதோ எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

ஜுன் 7ம் தேதி இசை வெளியீட்டை நடத்துவதற்கு முன்பாக இந்த ‘சிங்கிள் டிராக்கை’ 29ம் தேதி வெளியிடுகிறார்கள்.

 

Read Previous

Masss – Therikkudhu Masss – Full Song With Lyrics – Video

Read Next

ஈராஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய தமிழ்ப் படங்கள்

Most Popular