‘ஜிகர்தண்டா’ ரீமேக் உரிமை – நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஃபைவ் ஸ்டார் நிறுவனம் எஸ்.கதிரேசன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜிகர்தண்டா’.

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிக்குத் தெரியாமலே தயாரிப்பாளர் கதிரேசன் விற்றதாகத் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் இயக்குனர்கள் சங்கத்திலும் புகார் தெரிவித்திருந்தார். அதன் பின் இயக்குனர்கள் சங்கத்தின் ஆலோசனைப்படி நீதிமன்றத்தில்  கார்த்திக் சுப்புராஜ் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் ‘ஜிகர்தண்டா’ படத்தின் ரீமேக் உரிமையை விற்பதற்கு ஜுன் 11ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தரப்பிலிருந்து பத்திரிகைச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளதாம். தயாரிப்பாளருடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை விற்கும் போது தனக்கும் 40 சதவீதம் தர வேண்டும் என தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார் என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

 

 

Read Previous

25 பெண்களுக்கு நிதியுதவி செய்த சூர்யா, ஜோதிகா

Read Next

Haiku – Official Teaser