மகேஷ் பாபு நடிக்கும் நேரடித் தமிழ்ப் படம் ‘பிரம்மோற்சவம்’…

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி பட நிறுவனமாக விளங்கும், பிவிபி சினிமா படநிறுவனம் “நான் ஈ, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

தற்போது கார்த்தி – நாகார்ஜுனா நடிக்கும் படம், ஆர்யா நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’, ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபதி, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் உட்பட பல படங்களைத் தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்து ‘பிரம்மோற்சவம்’ என்ற படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது.

தெலுங்குப் பட உலகின் முன்னணி நடிகராக விளங்கும் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். முதன் முறையாக மகேஷ்பாபு நேரடியாக நடிக்கும் தமிழ்ப்படம் இது. ராகுல் பிரீத் சிங், ப்ரணிதா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சத்யராஜ் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

மிக்கி மேயர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். பல வெற்றிபடங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
தோட்டாதரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

‘பிரம்மோற்சவம்’ படத்தை ஸ்ரீகாந்த் அதலா எழுதி இயக்குகிறார். தயாரிப்பு – பேர்ல் வி பொட்லூரி – பரம் வி பொட்லூரி.

மியூசிகல் எண்டர்டெயினராக உருவாகும் இப்படம், குடும்ப உறவுகளின் மகிமையையும் உன்னதங்களையும்ம் சொல்வதோடு, குடும்ப உறவுகளை எப்படிக் கொண்டாட வேண்டும், தலைமுறைகளைத் தாண்டி நம் பாரம்பரியத்தை எப்படி போற்றிப் பாதுகாப்பது என்பதையும், வாழ்க்கையைப் பற்றிய பாசிட்டிவ்வான பார்வையையும் எடுத்துரைக்கும் படமாகவும் உருவாகிறது.

Read Previous

ஜுன் 19-ல் ‘குற்றம் கடிதல், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’…

Read Next

Baahubali – Tamil – Official Trailer