அனிருத், சிவகார்த்திகேயன் இணைந்து பாடிய பாடல்…

தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் ‘மாப்ள சிங்கம்’.

விமல், அஞ்சலி, சூரி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார்.  என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத், சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து படத்தின் பிரமோஷனுக்காக ‘எதுக்கு மச்சான் காதலு…’ என்ற பாடலைப் பாடிக் கொடுத்துள்ளனர்.

விரைவில் ‘மாப்ள சிங்கம்’ வெளியாக உள்ளது.

 

Read Previous

Eli – Official Trailer – 2

Read Next

ஜுன் 16-ல் ‘ரஜினி முருகன்’ இசை வெளியீடு…

Most Popular