பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ரஜினி முருகன்’.
இந்தப் படத்தின் சிங்கிள் டிராக்கான ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா…’ கடந்த வாரம் சிங்கபூரில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ யு டியூபிலும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது படத்தின் அனைத்துப் பாடல்களுக்குமான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.
இந்த நிலையில் ஜுன் 7ம் தேதி வெளியிட இருந்த ‘ரஜினி முருகன்’ படத்தின் இசையை ஜுன் 16ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.