‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி

‘காக்கா முட்டை’ படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மணிகண்டன்.

அவர் ஏற்கெனவே, விதார்த் நாயகனாக நடித்துள்ள ‘குற்றமும் தண்டனையும்’ படத்தை 35 நாட்களில் இயக்கி முடித்துள்ளார்.

மணிகண்டன் அடுத்து விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க உள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘ஆரஞ்சு மிட்டாய்’ இம்மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கடுத்து ‘இடம் பொருள் ஏவல்’ படம் வெளியாக உள்ளது.

‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்துள்ள முடித்துள்ள விஜய் சேதுபதி ‘இறைவி’ படத்திலும், ‘மெல்லிசை’ படத்திலும் நடித்து வருகிறார். அதோடு நலன் குமாரசாமி இயக்கத்திலும் நடித்து வருகிறார்.

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படம் நிச்சயம் வித்தியாசமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த வருடக் கடைசியில் இப்படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

Read Previous

Maari – Review

Read Next

ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த ராஜமௌலி…