ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த ராஜமௌலி…

நியாயமாக ஷங்கர் செய்த சாதனையைத்தானே ராஜமௌலி முறியடித்தார் என்று தலைப்பு வரவேண்டும் என நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஷங்கர் என்ற இயக்குனர் ரஜினிகாந்த் என்ற மிகப் பெரிய நட்சத்திரத்தை வைத்து புரிந்த சாதனையை ராஜமௌலி என்ற இயக்குனர் ரஜினிகாந்த் அளவிற்கு இந்திய அளவில் தெரியாத நடிகர்களை வைத்துப் புரிந்த சாதனைதானே பெரியது.

மேலும் ‘எந்திரன்’ படத்தைத் தயாரித்த நிறுவனம் அந்தப் படத்திற்கான அளவுக்கதிமான விளம்பரங்களை அவர்களது அனைத்துத் தொலைக்காட்சி மூலம் செய்தார்கள். ஆனால், ராஜமௌலி குழுவினர் தங்களது சொந்தப் பணத்தைப் போட்டு படத்தை விளம்பரம் செய்தது ஒருபுறமிருக்க, படத்தின் டிரைலரைப் பார்த்தே மீடியாக்கள் அந்தப் படத்திற்கான பிரமோஷனை தாங்களாகவே செய்தார்கள்.

‘எந்திரன்’ படத்தின் மொத்த வசூல் சுமார் 290 கோடி ரூபாய் என ஒரு சாதனை புள்ளி விவரம் உள்ளது. அது 100 நாட்களுக்கும் மேல் ஓடி புரிந்த சாதனை. ஆனால், ‘பாகுபலி’ படம் அநத் சாதனையை சுமார் 9 நாட்களுக்குள் முறியடித்துள்ளது.

கடந்த 10ம் தேதி வெளிவந்த ‘பாகுபலி’ படம் நேற்றோடு சுமார் 303 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக ஹைதராபாத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் பல சாதனைகளை ‘பாகுபலி’ புரியும் என்றே அனுபவம் வாய்ந்த திரையுலகத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Read Previous

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி

Read Next

maari-review