‘செல்லமே’ படத்தில் நாயகனாக அறிமுகமான விஷால் இரண்டாவது படமான ‘சண்டக்கோழி’ படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாக நடித்து பட்டி தொட்டி எங்கும் தெரியும் நடிகராக மாறினார். இப்போது அவருடைய 25வது படமாக ‘சண்டக்கோழி 2’ படம் அமைந்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஷால், ‘என் வீட்டில் பூஜை அறையில் உள்ள சாமியை நம்பறனோ இல்லையோ, இந்த சாமி என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவா கொண்டு வந்து நிறுத்திட்டாரு,” என்றார்.
“25 படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சண்டக்கோழி பாகம் ஒன்னு எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல.அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது.
கதை பற்றி கேள்வி பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண்பர் அந்த உரிமையில் அந்த படத்தை நான் நடிக்கின்றேன் என்று கூறினேன் அப்போது செல்லமே படம் வெளிவரவில்லை.
சண்டக்கோழியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார். அங்கே தொடங்கியதுதான் என் வாழ்கை. கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது.
தாவணி போட்ட தீபாவளி பாடல் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. பந்தம் கொடி’ என்று தெலுங்கிலும், வெளியிட்டார்கள். லிங்குசாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம். என் அப்பா நினைத்திருந்தால் அப்படத்தின் தெலுங்கு உரிமையை பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம். ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார். அங்கு இரண்டு வாரத்திற்கு கூட்டம் இல்லை மூன்றாவது வாரத்திலிருந்து அலை மோத ஆரம்பித்தனர். சண்டை கோழி 2, எனது 25வது படமாக அமைந்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
கீர்த்தி நடித்த மற்ற படங்களை பார்த்து இருக்கின்றேன். அவருஐடய மகாநதி படத்தைப் பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறினேன். அவருடன் நடித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் எழுத்தாளர். நான் படம் இயக்குவேனோ இல்லையோ, கட்டாயம் கீர்த்தி சுரேஷ் எனக்கு முன்பே இயக்குநராக வருவார். வீட்டில் எங்க அப்பாவை எப்படி பார்த்தேனோ அதே போல் செட்டில் ராஜ்கிரன் சாரை பார்த்தேன்.
பிரபு சாருடனோ, ராஜ்கிரன் சாருடனோ நடிக்கும் போதும் பாலா சார் இயக்கத்தில் நடிக்கும் போதும் அவ்வப்போது என்னை நானே கிள்ளிப் பார்ப்பேன். ‘சண்டக்கோழி 2, பந்தம்கோடி 2’ இரண்டுமே அக்டோபர் 18ல் வெளிவரவுள்ளது. அதுவும் ஆயுத பூஜை அன்று பெரிய அளவில் வெளிவரவுள்ளது. 2000 பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று வெளிவரும்.
இப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி. அனல் அரசு மாஸ்டர் மூலமாக உடலில் 100 தையல் வந்து விட்டது.
தயாரிப்பாளர் சங்கம் மூலமாக ஒரு வேண்டுகோள், தயவு செய்து படம் வெளிவந்து, மூன்று நாள் கழித்து விமர்சனம் எழுதினால் நல்லது, இதை ஒரு வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன்,” என்றார் விஷால்.