‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘வேதாளம்’ என பெயரிட்டிருக்கிறார்கள்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, படத்தின் முதல் பார்வையுடன் சற்று முன்னர் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அஜித் தங்கையாக முதன் முறையாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வேதாளம்| என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ‘வேதாளம்’தான் படத்தின் பெயராக இருக்கும் என்ற தகவல் பரவி அதுவும் டிவிட்டரில் டிரெண்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு வித்தியாசமான டைட்டில் படத்தின் கதைக்குப் பொருத்தமான ஒன்றுதான், அதானல்தான் அப்படிப்பட்ட பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.ஐஸ்வர்யா இப்படத்தைத் தயாரிக்கிறார்.