‘சூது கவ்வும்’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி தொடர்ச்சியாக தோல்விப் படங்களையே கொடுத்து வந்தார்.
அந்தப் படத்திற்குப் பிறகு வெளிவந்த ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய்’ என ஆறு தோல்விப் படங்களில் நடித்திருந்தார்.
நல்ல திறமையான நடிகராக வளர்ந்து வந்தாரோ ஏன் இப்படிப்பட்ட தோல்விப் படங்களில் நடித்து தன் வளர்ச்சியைக் கெடுத்துக் கொள்கிறார் என சராசரி ரசிகர்கள் கூட பேச ஆரம்பித்தார்கள்.
இப்போது ‘நானும் ரௌடிதான்’ படம் மூலம் மீண்டும் தன்னுடைய வெற்றிப் பயணத்தைத் தொடர ஆரம்பித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
கடந்த இரண்டு நாட்களாக இந்தப் படத்திற்கு வரும் விமர்சனங்களும், வசூலும் படத்தை இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாற்றிவிடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.