இணையத்தைக் கலக்கும் ‘ஜில் ஜங் ஜக்’ பிரமோஷனல் வீடியோ

சித்தார்த் தயாரித்து நாயகனாக நடித்துள்ள ‘ஜில் ஜங் ஜக்’ படம் இன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தை பல்வேறு வழிகளில் சித்தார்த் பிரமோட் செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் இப்படத்தின் பிரமோஷனுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ மிகவும் சுவாரசியமாக அமைந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் அந்த வீடியோவில் நடித்துள்ள சிறுவன் பலரின் பாராட்டுக்களை அள்ளி விட்டான்.

அந்த வீடியோ சித்தார்த்தையும் சேர்த்து கிண்டலடிப்பதாகவே இருந்தாலும் அதையும் சுவாரசியமாகவே கொடுத்திருக்கிறார்கள். சித்தார்த் தனது நண்பர்களுடன் ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் போஸ்டரை ஒரு சுவற்றில் ஒட்டும் போது, டீக் கடை சிறுவன் ஒருவன் அந்த போஸ்டரைப் பார்த்து ‘இது கமர்ஷியல் படமா’ என்று கேள்வி கேட்பதிலிருந்து அந்த வீடியோ ஆரம்பமாகிறது.

அந்த வீடியோவில் ‘சமந்தா, அரண்மனை 2’ ஆகியவற்றைக் கூட விட்டுவைக்கவில்லை, நன்றாகவே கிண்டலடித்திருக்கிறார்கள். படம் எப்படியிருக்கப் போகிறதோ தெரியாது.

ஆனால், அதற்கு முன்பாக வெளிவந்துள்ள இந்த பிரமோஷனல் வீடியோ படத்தின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

Read Previous

When is Kabali releasing ?

Read Next

காதலர் தினத்தன்று ‘கககபோ’ சிங்கிள் டிராக் வெளியீடு