காதலர் தினத்தன்று ‘கககபோ’ சிங்கிள் டிராக் வெளியீடு

‘கககபோ’ இத்திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.

இந்த பாடலை சின்னத்திரை நட்சத்திரங்களான ‘தாமரை’ தொடரில் நடித்த சாய் பிரசாத், ‘தென்றல்’ தொடரில் நடித்த காவி வர்ஷினி, ‘நாதஸ்வரம்’ தொடரில் நடித்த கிருத்திகா, ‘கோலங்கள்’ தொடரில் நடித்த ஷ்யாம், ‘வாணி ராணி’ தொடரில் நடித்த நீலிமா மற்றும் பாடகர் ஜகதீஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படம் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதேபோல் இந்தப் பாடலும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது, எனவே இப்பாடலை காதலர் தினத்தன்று வெளியிடுகிறார்கள்.

கேசவன், சாக்ஷி அகர்வால் நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். பவர் ஸ்டார், சிங்கம் புலி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ், மதன் பாப், மயில்சாமி,ரோபோ ஷங்கர் உட்பட 25க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தை செல்வி சங்கரலிங்கம் தயாரித்துள்ளார்.

Read Previous

இணையத்தைக் கலக்கும் ‘ஜில் ஜங் ஜக்’ பிரமோஷனல் வீடியோ

Read Next

‘ஆடி’யில் நடக்கும் திருமணம், ஆனந்தமா ? அவஸ்தையா ?