படத்துக்குப் படம் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளைத் தேர்ந்தெடுப்பதற்குள் இயக்குனர்களுக்கு இருண்டு விடும்.
முன்பை போல தொடர்ந்து ஒரே ஜோடிகளைப் பார்ப்பதற்கும் ரசிகர்களுக்குப் போரடித்து விடுகிறது. அதனால், புதிது புதிதாக ஹீரோயின்களை எதிர்பார்க்கிறார்கள்.
‘மஞ்சப் பை’ படத்தை இயக்கிய ராகவன் அடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறார்.
இந்தப் படத்திற்கு ‘மெட்ராஸ், கதகளி, கணிதன்’ படங்களின் நாயகி கேத்தரின் தெரேசாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
அழகுடன், அழகாகவும் நடிக்கத் தெரிந்த கேத்தரின் விரைவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்து விடுவார் போலிருக்கிறது.