‘மொட்ட சிவா கெட்ட சிவா’ பட இசை அனுபவம் – அம்ரீஷ்

பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் ‘கீ போர்ட் புரோகிராமராக’ பணியாற்றி ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அம்ரீஷ். இவர் 70களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்த ஜெயசித்ராவின் மகன்.

தனது முதல் படத்திற்காக 6 அருமையான பாடல்களை இசையமைத்தது பற்றி அவர் கூறுகையில்,

“‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற ஒரு படத்திற்காக இசையமைப்பது எனக்கு 10 படங்களுக்கு இசையமைத்ததற்கான அனுபவத்தைக் கொடுக்கிறது. என் மீது நம்பிக்கையும், பொறுப்பும் வைத்த சூப்பர் குட் செளத்ரி சார், வேந்தர் மூவீஸ் மதன் சார், டி. சிவா சார் ஆகியோர் வாழ்க்கையில் எனக்கு முதன் முறை ஒரு பயத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

லாரன்ஸ் போன்ற மிகச் சிறந்த டான்சருக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது மிகச் சிறந்த அனுபவம்.

இப்படத்தில் உள்ள 6 பாடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பல புதிய சோதனை ஒலிகளை பயன்படுத்தும் பழக்கம் உள்ள எனக்கு இப்படத்திற்கு பெரிதும் பயன்பட்டுள்ளது.

ரீமேக் படமாக இருந்தாலும் ஒரிஜனல் படத்திலிருந்து ஒரு டிராக் கூட காப்பியடிக்கவில்லை. படத்தின் ஓபனிங் பாடலை சங்கர் மகாதேவன் பாட மும்பையில் பதிவு செய்தோம். அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்த பிறகு பாடிய முதல் பாடல் இது. அவர் குணமடைவதற்காக ஒரு மாதம் காத்திருந்து பிறகு பாடலைப் பதிவு செய்தோம். அவரைத் தவிர வேறு யாரும் அந்தப் பாடலை சிறப்பாகப் பாடிவிட முடியாது.

எம்ஜிஆர் அவர்களின் பாடல் ஒன்றையும் படத்தில் ரீமிக்ஸ் செய்துள்ளோம். இந்தப் பாடலை சங்கர் மகாதேவன், சாதனா சர்கம் பாடியுள்ளனர். இந்தப் பாடலைப் பாடி முடித்ததும் லாரன்ஸ் மாஸ்டருக்கு போன் செய்த சங்கர் மகாதேவன், எம்ஜிஆர் அவர்களின் பாடலைப் பாடியது ஒரு வரம் என்றார்.

படத்தின் அனைத்துப் பாடல்களும் ஏறக்குறைய முடிந்து விட்டது. ஒரு பாடல் படமாகியும் விட்டது. அந்தப் பாடலுக்கு ரோபோ போல லாரன்ஸ் மாஸ்டர் நடனம் ஆடியிருப்பதில் ஆச்சரியமில்லை.

பாடல்கள் அனைத்தும் அமெரிக்காவில் ‘டைட்டானிக்’ பாடல் மாஸ்டர் செய்யப்பட்ட இடத்தில் மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 7ம் தேதி சிவராத்திரி அன்று ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் முதல் பார்வை வெளியாக உள்ளது.

இன்னும் சில மாதங்களில் படத்தின் இசை வெளியீடும் நடக்கும். மார்ச் 7ம் தேதியன்று பயத்துடனும், மகிழ்ச்சியுடனும், த்ரில்லிங்குடனும் காத்திருக்கிறேன்,” என மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார் அம்ரீஷ்.

Read Previous

Aviyal – Promo Video Song

Read Next

மார்ச் 12ல் ‘எவன்டா’ ரிலீஸ்