“செல்வந்தன், புருஸ்லீ – 2” ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரித்திருக்கும் ‘எவன்டா’.
தெலுங்கில் ‘பலுப்பு’ என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படமே தமிழில் ‘எவன்டா’ என்ற பெயரில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் ரவி தேஜா நாயகனாக நடிக்க நாயகிகளாக ஸ்ருதிஹாசன், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளார்கள். மற்றும் ராய் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தம், ஜெயபிரகாஷ், ஆதித்யா மேனன், பிரமாஜி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
படம் பற்றி தமிழ் உருவாக்கம் செய்திருக்கும் A.R.K.ராஜராஜா படம் பற்றி கூறியதாவது,
“இந்தப் படம் காமெடி கலந்த கமர்ஷியல் படம். ரவி தேஜா படம் என்றாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது. அது போல் இந்தப் படத்திலும் காமெடி கலாட்டா செய்திருக்கிறார்.
படத்தில் ஐந்து சண்டைக் காட்சிகள் இருக்கிறது, ஒவ்வொரு சண்டைக் காட்சியும் ஒவ்வொரு விதமாக இருக்கும். தமனின் இசை அனைத்து படங்களுக்கும் ஸ்பெஷலாக இருக்கும். தெலுங்கில் தமனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் ரவி தேஜா தான். அதனால் இந்த படத்தின் இசையில் கூடுதல் ஸ்பெஷல் இருக்கும்.
இந்த படம்தான் ஸ்ருதிஹாசனுக்கு தெலுங்கில் மெகா ஹிட் படம். நடிகை அஞ்சலிக்கும் மிகப் பெரிய பலமாக இருந்ததும் இந்த படம்தான்,” என்கிறார் ARK.ராஜராஜா.
‘எவன்டா’ இந்த மாதம் 12ம் தேதி வெளியாக உள்ளது.