சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்ஷன் ராகவா லாரன்ஸின் ‘முனி 4 – காஞ்சனா 3’ படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று பொங்கலன்று வெளியானது.
யு டியுபில் வெளியான ஒரே நாளில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து அது சாதனை படைத்திருக்கிறது.
அடுத்த சில நாட்களில் அது 1 கோடி பார்வையாளர்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோஷன் போஸ்டருக்குக் கிடைத்துள்ள வரவேற்புக்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
“இந்த அளவு வைரலாகக் காரணமான என் ரசிகர்கள், இணையதள, பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் ‘காஞ்சனா 3’ மோஷன் போஸ்டரைப் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்கிறார் ராகவா லாரன்ஸ்.
‘காஞ்சனா 3’ படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்திருக்கிறார். ஓவியா, வேதிகா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். கோவை சரளா, தேவதர்ஷினி, நிகி டம்போலி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.