ஜனவரி 25ம் தேதி ‘சார்லி சாப்ளின் 2’ ரிலீஸ்

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ’சார்லி சாப்ளின் 2’.

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் அம்ரிஷ் இசையமைப்பில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ரானி, அதா சர்மா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் பாகமான ‘சார்லி சாப்ளின்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்த படமாக அமைந்தது.

இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா, பிரபு இருவரும் நடித்துள்ளார்கள்.

மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, ரவிமரியா, T.சிவா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில்,

“என் படங்களில் காமெடியும் கமர்ஷியலும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இதன் முதல் பாகத்தில் இதெல்லாம் இருந்ததால் தான் படம் எல்லா மொழிகளிலும் அமோக வெற்றி பெற்றது. 16 வருடங்களுக்குப் பிறகு அதே டைட்டிலில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

பிரபு தேவா மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்துபவராக நடிக்கிறார். நிக்கி கல்ராணி சமூக ஆர்வலராக நடிக்கிறார். பிரபு சார் டாக்டராகவும் அதா சர்மா மனோதத்துவ நிபுணராகவும் நடிக்கிறார்கள். படம் அனைத்து ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாகியுள்ளது,” என்கிறார் இயக்குனர்.

ஜனவரி 25ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

காஞ்சனா 3 – மோஷன் போஸ்டருக்கு பிரமாத வரவேற்பு

Read Next

பொங்கல் வாழ்த்து கூறிய புதிய திரைப்படங்கள்…

Most Popular