கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் முதன் முறையாக நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை ஆரம்பமானது. ‘கொடி’ படத்தை முடித்த பத்து நாள் இடைவெளிக்குள் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார் தனுஷ்.
ஆனால், சிம்புவை வைத்து கௌதம் மேனன் ஆரம்பித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடைந்ததாகத் தெரியவில்லை. அந்தப் படத்தை முடிப்பதற்குள் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் ஆரம்பித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பொதுவாக படப்பிடிப்பு ஆரம்பமான முதல் நாள் ஒரு சில புகைப்படங்களை மட்டும்தான் மீடியாக்களுக்குத் தருவது வழக்கம்.
கௌதம் மேனன் முதல் நாள் படப்பிடிப்பு வீடியோவையே வெளியிட்டுவிட்டார்.
அட, நீங்க ஷுட்டிங் ஆரம்பிச்சிட்டீங்கன்றத நாங்க நம்புறோம்பா…அதுக்கு எதுக்கு வீடியோலாம்…என யாரும் கமெண்ட் அடிக்காமல் இருந்தால் சரி…
இப்படி ஒரு வீடியோவை வெளியிடறாங்கன்னா யாருக்கோ என்னமோ சொல்ல வர்றாங்கன்னு மட்டும் புரியுது…