கலையரசன், காளி வெங்கட் நடிக்கும் ‘ராஜா மந்திரி’

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட், பிஜி மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் உஷா கிருஷ்ணன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், பால சரவணன், ஷாலின் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ராஜா மந்திரி’.

ஆண்களும், பெண்களும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் காதல், உறவுகள், நட்பு, அழகான நினைவுகள் கொண்ட தொகுப்பே ‘ராஜா மந்திரி’. ஒரு சுத்தமான கிராமப் படம், கிராமத்தில் வாழும் ஒரு குடும்பம், அவர்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை முழுக்க முழுக்க குடும்பப் பின்னணியுடன் உருவாக்கியுள்ளோம் என்கிறார் இயக்குனர்.

பிரபல இயக்குனர் சுசீந்திரனிடம் ‘பாண்டிய நாடு, ஜீவா’ ஆகிய படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர் இவர்.

‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் நண்பனாக நடித்து கவனிக்கப்பட்ட கலையரசன் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். ‘கபாலி’ படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது இப்படத்திற்கு பக்கபலமாக அமையும். காளி வெங்கட் படத்தில் இன்னொரு நாயகனாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பால சரவணன் ஒரு முக்கிய நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். நாடோடிகள் கோபால், சரவணா சக்தி, கயல் ஃபெரைரா, சூப்பர் குட் சுப்பிரமணி, வைஷாலி, ரவி, ராஜா பாண்டி, ஆனந்தி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

மலையாளத்தில் 20 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலின் இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய வி.மதியழகன், பி.ஜி.முத்தையாவுன் இணைந்து தயாரித்துள்ளார்.

பல படங்களை விநியோகம் செய்துள்ள ஆரா சினிமாஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

விரைவில் படம் வெளியாக உள்ளது.

Read Previous

24 Tamil Movie – Kaalam Yen Kadhali – Lyrical Video Song

Read Next

‘டமால் டுமீல்’ ஆக ஆரம்பமாகும் ‘போகன்’

Most Popular