‘தெறி’ டிரைலர் 20ம் தேதி வெளியீடு ?

விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளிவர உள்ள 50வது படம் இது.

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் யூ டியூபில் வெளியிடப்பட்டு இதுவரை 93 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற மூன்றாவது டீசர் என்ற சாதனையையும் படைத்து, தற்போது 3 லட்சம் லைக்குகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வரும் 20ம் தேதி இசை வெளியீடு நடக்கும் போதே ‘தெறி’ படத்தின் டிரைலரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டீசர் படைத்த சாதனையை விட டிரைலர் இன்னும் அதிகமாக படைக்கும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

Read Previous

2.0 heads to Delhi

Read Next

Ennama Katha Vudranuga – Promo Song