ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தும் ஜி.வி.பிரகாஷ் குமார்

ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்துள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியிடப்பட்டது.

அதைப் பார்த்ததுமே ரஜினிகாந்த் ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.

தமிழ்த் திரையுலகத்திலேயே இதுவரை வந்த திரைப்படங்களில் என்றென்றும் மறக்காத ஒரு காட்சியாக இருப்பது ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிகாந்தை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சி.

அந்த காட்சியை அப்படியே ‘இமிடேட்’ செய்து, அதில் ரஜினிகாந்த் பேசிய வசனங்களையும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ மோஷன் போஸ்டரில் இணைத்துள்ளார்கள்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டுள்ளதாகவே இந்த மோஷன் போஸ்டர் இருக்கிறது.

ரஜினிகாந்தின் பிரபலமான வசனத்தையே படத் தலைப்பாக வைத்த போது கொதித்துப் போன ரஜினி ரசிகர்கள், ஜி.வி.பிரகாஷ், தற்போது ‘பாட்ஷா’ காட்சியையும் பயன்படுத்தியிருப்பது அவர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

Read Previous

Aagam – Review

Read Next

Oyee – Mudinja Oru Kai Paaru – Song