விஜய் ஆண்டனியை வாழ்த்திய இளையராஜா

SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தமிழரசன்’.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பது சிறப்பு.

இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனர் மிலன் தயாரிப்பாளர், கெளசல்யா ராணி, இயக்குனரும் தயாரிப்பாளருமான G.சிவா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

விஜய் ஆண்டனி, மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சி, இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப்பட்டது.

விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா, “இந்த படம் பிள்ளையார் சுழி போட்டதிலிருந்தே எல்லாமே பாசிடிவ்வாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்,” என்று வாழ்த்தினார்.

இந்தப் படத்தில் இயக்குனர் மோகன் ராஜா மகனும், தயாரிப்பாளர், எடிட்டிர் மோகனின் பேரனுமான மாஸ்டர் பிரணவ் மோகன் அறிமுகமாகிறார். எடிட்டிர் மோகனின் இளைய மகன், நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஏற்கெனவே ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடிகராக அறிமுகமாகி பாராட்டைப் பெற்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.

Read Previous

‘மெர்சல் – தமிழன்’ சாதனையை முறியடித்த ‘மாரி 2 – ரௌடி’

Read Next

தமிழரசன் – படத் துவக்க விழா – புகைப்படங்கள்