நடுங்க நடுங்க படமாக்கப்பட்ட ‘டார்லிங் 2’…

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சதீஷ் சந்திரசேகர் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், முனிஷ்காந்த், ஜானி, அர்ஜுனன், ரமீஸ், மாயா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டார்லிங் 2’.

இந்த படத்தில் இசையமைப்பாளர் ரதன், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்தி கண்ணன் அறிமுகமாகிறார்கள்.

இயக்குனர் சதீஷ் சந்திரசேகரும் அவருடைய நண்பர்களும் ஒரு சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட அனுபவம் தான் இந்த படத்தின் கதை.

“சின்ன பட்ஜெட்ல தான் இந்த படத்தை ஆரம்பித்தோம். சின்னப் படம் என்றாலும் ஞான வேல் ராஜ சாரின் கை பட்டதும் பெரிய படம் ஆகிப் போனது.

இந்தப் படத்தில் நடித்த அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தனர். படம் முழுக்க இரவு நேரத்தில் தான் நடந்தது. அதுவும் ஊட்டி குளிரில் படம் எடுத்தோம், குளிரில் நடுங்க நடுங்க படமாக்கப்பட்டது இந்தப் படம்.

இந்த வெயில் காலத்தில் ரசிகர்களை பேய் பயத்துடன் நடுங்க வைக்க வரும் ஏப்ரல் 1ம் தேதி வெளிவருகிறது,” என்கிறார் இயக்குனர்.

Read Previous

No rift in Nadigar Sangam – Vishal

Read Next

Motta Siva Ketta Siva – Motion Poster