1 கோடியைக் கடந்த ‘தெறி’ டீசர்

ஹிட்ஸ், லைக்ஸ் இவையிரண்டும்தான் இன்றைய இளைஞர்களின் லட்சியமாக (?) இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

சினிமாவை எடுத்து வெளியிட்டு வசூல் ஆகிறதோ, இல்லையோ, யு டியூபில் டீசருக்கும், டிரைலருக்கும் எவ்வளவு ஹிட்ஸ், லைக்ஸ் கிடைக்கிறது என படத்தில் நடித்துள்ளவர்களே கவலையுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

வசூல் நிலவரம் என்ன என்பதன் உண்மை நிலைமை யாருக்கும் தெரியாது. ஆனால், யு டியூபில், டீசர், டிரைலரை எத்தனை பேர் பார்க்கிறார்கள், லைக் போடுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதை வைத்தும் கூட யாருக்கு ரசிகர்கள் அதிகம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதைக்கு விஜய்க்குத்தான் ரசிகர்கள் அதிகம் என்பதை ‘தெறி’ டீசரின் சாதனை புரிய வைத்திருக்கிறது.

சற்று முன் ‘தெறி’ படத்தின் டீசர் 1 கோடி ஹிட்ஸ்களைக் கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது. 2 லட்சத்து 96த்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளையும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட்டுகளையும் அளித்துள்ளனர்.

அதிகப்படியான லைக்ஸ்களை வாங்கிய டீசராக ‘தெறி’ டீசர் முன்னணியில் இருக்கிறது. ஹிட்ஸ் சாதனையை முறியடிக்க ‘ஐ’ பட டீசர் சாதனையான 1 கோடியே 13 லட்சம் ஹிட்ஸ்களை முறியடிக்க வேண்டும். அதையும் ‘தெறி’ டீசர் முறியடிக்கும் என்றே தோன்றுகிறது.

Read Previous

Kalam – Teaser

Read Next

‘24’ – ஏப்ரல் 11-ல் இசை வெளியீடு