விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘24’.
இப்படத்தின் இசை வெளியீடு வரும் 11ம் தேதியன்று நடைபெற உள்ளது. சென்னையில் காலையில் நடைபெறும் விழாவில் தமிழ்ப் படத்தின் இசை வெளியீடும், மாலையில் ஹைதராபாத்தில் நடைபெறும் விழாவில் தெலுங்குப் படத்தின் இசை வெளியீடும் நடக்க உள்ளது.
‘சில்லுனு ஒரு காதல்’ படத்திற்கப் பிறகு சுமார் 10 வருடங்கள் கழித்து சூர்யா நடிக்கும் படம் ஒன்றிற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
டைம் மிஷின் சம்பந்தப்பட்ட ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக ‘24’ உருவாகியுள்ளது.