நாளை 10 படங்கள் ரிலீஸ்

2016ம் ஆண்டில் மார்ச் மாதம் முடிய மூன்று மாதத்திலேயே சுமார் 50 படங்கள் வெளியாகின.

நாளை ஏப்ரல் 8ம் தேதி வெள்ளிக் கிழமை 10 படங்கள் வெளியாக உள்ளன. “அவன் அவள், ஆதி கோட்டை, ஆய்வுக் கூடம், ஒரு நொடியில் பார்வதிபுரம், ஓய், கிடா பூசாரி மகுடி, முதல் தகவல் அறிக்கை, டீ கடை ராஜா, ஜித்தன் 2, ஜெனிஃபர் கருப்பையா” ஆகிய 10 படங்கள் வெளியாகின்றன.

இவற்றில் சென்னையில் ஒரே ஒரு தியேட்டரில் கூட சில படங்கள் வெளியாகின்றன. இத்தனை படங்கள் ஒரே நாளில் வெளிவருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1000 தியேட்டர்களை எத்தனை படங்கள் பங்கு போட்டுக் கொள்ளும்.

ஏற்கெனவே வெளிவந்த ‘ஹலோ நான் பேய் பேசுறேன், டார்லிங் 2, பிச்சைக்காரன், தோழா, காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல் நாளை ‘தி ஜங்கிள் புக், வொல்கனோ ரிட்டர்ன்ஸ்’ ஆகிய இரண்டு ஆங்கிலப் படங்களும், ‘சர்தார் கப்பார் சிங்’ தெலுங்குப் படமும் வெளியாக உள்ளது.

 

Read Previous

அதிக எதிர்பார்ப்பில் ‘தி ஜங்கிள் புக் – மௌக்லி’

Read Next

சென்னையில் 17 தியேட்டர்களில் ‘சர்தார் கப்பார் சிங்’ ரிலீஸ்

Most Popular