சென்னையில் 17 தியேட்டர்களில் ‘சர்தார் கப்பார் சிங்’ ரிலீஸ்

தமிழ்நாட்டில் ஒரு தெலுங்குப் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பா என தமிழ்த் திரையுலகமே ஆச்சரியப்பபட்டாலும் ஆச்சரியமில்லை.

பவன் கல்யாண், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள ‘சர்தார் கப்பார் சிங்’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

பவன் ரசிகர்கள் இப்போதே நாளை ரிலீஸ் கொண்டாட்டத்தை ஆந்திரா, தெலுங்கானா, அமெரிக்கா ஆகிய இடங்களில் ஆரம்பித்துவிட்டார்கள்.

நாளை அந்த கொண்டாட்டத்தை சென்னையில் மட்டுமல்லாது, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பார்க்கலாம்.

சென்னையில் மட்டும் ‘சர்தார் கப்பார் சிங்’ படம் 17 தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னையை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உள்ள 22 தியேட்டர்களிலும் இப்படம் வெளியாகிறது.

வேறு எந்த தெலுங்கு நடிகருக்கும் இல்லாத ஒரு வரவேற்பு பவன் கல்யாணுக்கு இந்த முறை தமிழகத்தில் கிடைத்துள்ளது.

Read Previous

நாளை 10 படங்கள் ரிலீஸ்

Read Next

ஹைதராபாத்தில் சூர்யாவுக்கு அமோக வரவேற்பு

Most Popular