நன்றாகவே நடந்த ‘நட்சத்திர கிரிக்கெட்’

‘சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று போய்விடும்’ என்று சிலர் நினைத்துக் கொண்டார்கள். ஆனால், எந்தத் தடங்கலும் இன்றி ‘நட்சத்திர கிரிக்கெட்’ போட்டி நேற்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி முறை நன்றாகவே நடந்து முடிந்தது.

இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூவியவர்கள் கூட தவறாமல் சன் டிவியில் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள் என்பது வேறு விஷயம்.

தெலுங்குத் திரையுலகின் ஆக்ஷன் ஸ்டார் பாலகிருஷ்ணா காலையிலிருந்து இரவு பரிசு வழங்கும் வரை அதே எனர்ஜியுடன் இருந்து அனைவரையும் உற்சாகப்படுத்தியது குறிப்பிட வேண்டிய விஷயம். நிஜமாகவே இவர் ஆக்ஷன் ஸ்டார் மட்டுமல்ல ஆக்டிவ் ஸ்டாரும் கூடத்தான்.

தெலுங்குத் திரையுலகத்திலிருந்து மேலும் நாகார்ஜுனா, வெங்கடேஷ், ஸ்ரீகாந்த், தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திர பிரசாத், செயலாளர் சிவாஜிராஜா ஆகியோரும், கன்னடத் திரையுலகத்திலிருந்து அம்பரீஷ், சிவராஜ்குமார், சுதீப் ஆகியோரும் மலையாளத் திரையுலகத்திலிருந்து மம்முட்டி, நிவின் பாலி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியை காலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் டாஸ் போட்டு துவக்கி வைத்தனர்.

இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் 8 கிரிக்கெட் அணிகள் விளையானடி. சென்னை சிங்கம்ஸ், திருச்சி டைகர்கஸ், கோவை கிங்ஸ், ராம்நாடு ரைனோஸ், மதுரை காளைஸ், சேலம் சீட்டாஸ், நெல்லை டிராகன்ஸ், தஞ்சை வாரியர்ஸ் ஆகிய அணிகள் போட்டியிட்டன.

அரை இறுதியில் சென்னை சிங்கம்ஸ், சேலம் சீட்டாஸ், ராம்நாடு ரைனோஸ், தஞ்சை வாரியர்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

இறுதிப் போட்டியில் சென்னை சிங்கம்ஸ், தஞ்சை வாரியர்ஸ் அணிகள் விளையாடின. இதில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

போட்டிகளுக்கு இடையே நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளும் பல சுவாரசியமான நிகழ்வுகளும் நடைபெற்றன.

நடிகர்கள் விக்ரம், விஷால், கார்த்தி, பாலகிருஷ்ணா, மம்மூட்டி, வெங்கடேஷ், சுதீப் அனைவரும் பாரம்பரிய இசை வாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து வாத்தியக் கருவிகளை வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.

நேற்று நடிகர் விக்ரமின் பிறந்த நாளை அனைத்து நடிகர்கள், நடிகைகள் சூழ மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

ஒரு வரலாற்று நிகழ்வில் பிறந்த நாளைக் கொண்டாடிய விக்ரம், ”எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த, உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கும்,எனது ரசிகர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். நான் ரசிக்கும் நடிகர்களுக்கு ரசிகனாகத் தான், நான் இங்கே வந்திருக்கிறேன். இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி,” என்றார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற சென்னை சிங்கம்ஸ் அணியினருக்கும் மற்றறவர்களுக்கும் நடிகர்கள் கமல்ஹாசன், அம்பரீஷ், பாலகிருஷ்ணா, பிரபு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இந்த நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், பழம் பெரும் நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முடிவில் நடிகர் சங்க செயலாளர் விஷால் அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.

இந்த நட்சத்திரி கிரிக்கெட் நடக்கக் கூடாது விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டவர்களுக்கு நடிகர் சங்க வரலாற்றில் பெரிய பெயர் கிடைத்து விடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் சில முன்னணி நடிகர்கள் இந்த நிகழ்வையே புறக்கணித்தார்கள் என்று நாம் விசாரித்த வரையில் தெரிந்து கொள்ள முடிந்தது.

சன் டிவி சார்பாக நடிகர் சங்கத்திற்கு 1 கோடியே 75 லட்ச ரூபாயும், நடிகர் சங்க அறக்கட்டளைக்கு 7 கோடியே 25 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது.

பல சர்ச்சைகள், எதிர்ப்புகள், கருத்துக்கள் ஆகியவற்றையும் மீறி நாசர் தலைமையிலான நடிகர் சங்கமும், அதன் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நட்சத்திர கிரிக்கெட் திருவிழாவை சிறப்பாக செய்து முடித்தனர்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்ட பின் அது காலத்திற்கும் பேசப்படும், அதோடு இந்த நட்சத்திர கிரிக்கெட்டும் பேசப்படும்.

Read Previous

Iru Mugan – Official Teaser

Read Next

ரஜினி படத்திற்கு உதவி செய்த கமல்