சா’தீ’யத் தலைப்பு, சரியா மிஸ்டர் கமல்ஹாசன் ?

தமிழ்நாட்டில் மட்டும்தான் அவரவர் பெயருக்குப் பின்னால் அவர்கள் சார்ந்த சாதிப் பெயரைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் இல்லாமல் உள்ளது.

கௌதம் மேனன், நித்யா மேனன், ஜனனி ஐயர் என சில திரையுலகப் பிரபலங்கள் இன்னமும் தங்களது சாதிப் பெயரை விடாமல் போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

பகுத்தறிவு பேசும் கமல்ஹாசன் இன்று ஆரம்பித்துள்ள அவரது புதிய படத்தின் பெயரை ‘சபாஷ் நாயுடு’ எனத் தலைப்பிட்டுள்ளது நடுநிலையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சாதிப் பெயரைக் கூட குறிப்பிடாமலே திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில், ‘தேவர் மகன்’ படத்தின் மூலமாக ஒரு வரலாற்றை ஆரம்பித்து வைத்த கமல்ஹாசன், மக்களும், ரசிகர்களும் சாதியை மறைத்தும், மறந்தும் கொண்டிருக்கும் நேரத்தில் ‘சபாஷ் நாயுடு’ என்று பெயர் வைத்திருப்பது சரியா ?.

அதற்கான கேள்வியை பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பிய போது ‘தெருவிலிருந்து சாதிப் பெயரை முதலில் எடுங்கள்’ என்று பதிலளித்துள்ளார்.

சென்னை மாநகரில் பல வருடங்களாக வசித்து வரும் கமல்ஹாசன் சமீப காலமாக சென்னைத் தெருக்களின் பெயர்ப் பலகையைச் சரியாகக் கவனிக்கவில்லையோ என்றே கேட்கத் தோன்றுகிறது.

ஜி.என்.செட்டித் தெரு, ஜி.என்.தெரு-ஆகவும், கிருஷ்ணமாச்சாரி தெரு, கிருஷ்ணமா தெரு- ஆகவும் பெயர்ப் பலகைகளில் மாற்றப்பட்டு, இன்றைய தலைமுறையும் அதையே பேசி வருகிறதே, அது அவருக்குத் தெரியவில்லையோ.

கமல்ஹாசன் போன்ற சமூகத்தில் அக்கறை உள்ள நடிகர்கள் எந்தக் காரணத்திற்காகவும் ‘சபாஷ் நாயுடு’ என்பதை காலத்திற்கும் சொல்லப்படுவதை தவிர்க்கலாம்.

‘சபாஷ் நாயுடு’ என்பதை ‘சபாஷ் பல்ராம்’ என வைக்கலாமே…?

Read Previous

Chennai To Singapore – Music launch in 6 countries

Read Next

Theri – Eena Meena Teeka – Official Video Song