தமிழ் டீசர்களில் முதல் இடத்தில் ‘கபாலி’

‘கபாலி’ படத்தின் டீசர் நாளுக்கு நாள் புதுப் புது சாதனைகளைப் படைத்துக் கொண்டே இருக்கிறது.

நேற்று அதிகமான லைக்குகள் பெற்ற டீசர் என்ற சாதனையைப் புரிந்தது, இன்று அதிகமாகப் பார்வையிடப்பட்ட டீசர் என்ற மற்றுமொரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

மே 1ம் தேதி காலை 11 மணிக்கு வெளியான ‘கபாலி’ டீசர் இதுவரை 11,60,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ‘ஐ’ படத்தின் டீசரை முறியடித்து தமிழ்த் திரைப்பட டீசர்களில் நம்பர் 1 இடத்தை ‘கபாலி’ டீசர் பிடித்துள்ளது.

3,34,000 லைக்குகளைப் பெற்று உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற மூன்றாவது டீசர் என்ற சாதனையையும் புரிந்திருக்கிறது.

‘அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆப் அல்ட்ரான்’ பட டீசர் 5 லட்சம் லைக்குகளுடன் முதலிடத்திலும், ‘ரக் ஒன் – எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி’ பட டீசர் 3 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

‘ஸ்டார் வார்ஸ்’ பட டீசரின் லைக்குகளை முறியடிக்க ‘கபாலி’ டீசருக்கு இன்னும் 25,000 லைக்குகள் மட்டுமே தேவை.

Read Previous

Meendum Oru Kadhal Kathai – Yedhedho Pennae – Making Video

Read Next

Ajith spills the beans on his next

Most Popular