சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சரண்யா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்துள்ள ‘24’ திரைப்படம் உலக அளவில் முதல் நாள் வசூலாக சுமார் 20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 4.5 கோடி ரூபாயும், ஆந்திரா, தெலுங்கானாவில் 4.1 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.
கர்நாடகா, கேரளா, இந்தியாவின் பிற மாநிலங்களில் 3.2 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 8 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளியான முதல் நாளில் படம் கொஞ்சம் நீளம் என்று ரசிகர்களிடையே கருத்து எழுந்ததைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.
நேற்றும் இன்றும் விடுமுறை தினம் என்பதால் இந்த இரண்டு நாட்களில் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.