‘பாகுபலி’ சாதனையை முறியடித்த ‘கபாலி’ டீசர்

‘கபாலி’ டீசர் வெளியிடப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.

இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் அனைத்து டீசர், டிரைலர்கள் வீடியோக்களின் சாதனையை முறியடித்து மேலும் புதிய சாதனைகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது ‘கபாலி’ டீசர்.

தென்னிந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை இதுவரை ‘பாகுபலி’ படத்தின் டிரைலர்தான் அதிக அளவில் பார்வையாளர்களைப் பெற்ற டிரைலராக இருந்தது.

இப்போது ‘கபாலி’ டீசர் அந்த சாதனையை முறியடித்துள்ளது. ‘பாகுபலி’ டிரைலரை இதுவரை 1 கோடியே 39 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். ‘கபாலி’ டீசரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

அடுத்து ‘கபாலி’ டீசர் 4 லட்சம் லைக்குகளைப் பெற இன்னும் 11,000 லைக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது.

https://youtu.be/sOEg_YZQsTI

 

Read Previous

Tamannah joins Kaththi Sandai

Read Next

Kollidam – Official Trailer