கடைசி கட்ட படப்பிடிப்பில் ‘ரெமோ’

‘ரஜினி முருகன்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படம் ‘ரெமோ’.

இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இது பற்றி இப்படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம், “ரெமோ’ கடைசி கட்டப் படப்பிடிப்பு இன்று ஆரம்பம். சிவகார்த்திகேயன், அவருடைய மிகச் சிறந்த நடிப்பில்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘ரெமோ’ படத்தின் முதல் பார்வையும், தீம் மியூசிக்கும் ஜுன் மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் நர்ஸ் கதாபாத்திரத்தில் பெண் வேடத்திலும், தாத்தா வேடத்திலும், இளைஞன் கதாபாத்திரத்திலும் என மூன்று வேடங்களில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நடிக்கிறார். இப்படம் பற்றிய தகவல்கள் ரகசியமாக காக்கப்பட்டு வருகின்றன. ‘கபாலி’ புகைப்படங்கள் கூட எப்படியோ வெளிவந்துவிட்டது. ஆனால், இந்தப் படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார்கள்.

அனிருத் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்ய, வீடா நிறுவனம் சிவகார்த்திகேயனின் பெண், தாத்தா தோற்றங்களை உருவாக்க என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுடன் உருவாகி வருகிறது ‘ரெமோ’.

Read Previous

Taramani – First look teaser from tomorrow

Read Next

ஜீரோ ஆன ஹீரோ, விஜயகாந்தை கிண்டலடிக்கும் தெலுங்கு மீடியாக்கள்

Most Popular