ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘நட்சத்திர ஜன்னலில்’.
இந்தப் படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாகவும், அனுபிரியா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மற்றும் போஸ் வெங்கட், பாய்ஸ் ராஜன், ஜீவா ரவி, பெஞ்சமின், செல்வகுமார், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீலதா, நம்ரதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
“ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஏழைக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தையும், பணக்காரக் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றது. அப்படிப் பிறக்கிற குழந்தைகள் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படிக்கிறார்கள்.
ஒன்றாகப் படிக்கிற அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அந்த காதல் ஜெயித்ததா ? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா ? என்பதை ஸ்கூல் பின்னணியில் சொல்லி இருக்கிறோம்.
படிக்கிற வயசுல படிக்கணும், அதிலிருந்து கவனம் சிதறினால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை இளமை ததும்ப சொல்லி இருக்கிறோம்.
படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளா மற்றும் திருக்கோவிலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது,” என்கிறார் இயக்குனர் ஜெயமுருகேசன்.