மீண்டும் ‘மிருதன்’ கூட்டணி

v.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரெடக்ஷன்ஸ் தனது 10வது தயாரிப்பை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

ஏற்கெனவே இணைந்து பணியாற்றிய இயக்குனர்களுடன் ஜெயம் ரவி தற்போது மீண்டும் பணிபுரிந்து வருகிறார்.

‘ரோமியோ ஜுலியட்’ படத்தை இயக்கிய லட்சுமணுடன் மீண்டும் ‘போகன்’ படத்தில் இணைந்த ஜெயம் ரவி, அடுத்து தற்போது ‘மிருதன்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனுடன் மீண்டும் இணைய உள்ளார்.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அவை முடிந்ததும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும்.

Read Previous

What is Radha Mohan’s next ?

Read Next

மீண்டும் நடிக்க வந்த நெப்போலியன்