உண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலர் எல்லோ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அமலா பால், யுவஸ்ரீ, ரேவதி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள ‘அம்மா கணக்கு’ படம் வரும் வெள்ளி, 24ம் தேதியன்று வெளியாக உள்ளது.
10ம் வகுப்பு படிக்கும் மகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக வீட்டு வேலைகளைச் செய்யும் ‘வேலைக்காரி’யாக இருந்தாலும் மகளுக்காக அம்மா பள்ளிக்குச் சென்று படிக்கும் கதை கொண்ட படம்தான் ‘அம்மா கணக்கு’.
ஒரு தயாரிப்பாளராக ‘காக்கா முட்டை, விசாரணை’ போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்த தனுஷ், அந்த வரிசையில் ‘அம்மா கணக்கு’ படத்தையும் தயாரித்துள்ளார்.
ஹிந்தியில் ‘நில் பட்டே சன்னாட்டா’ என்ற பெயரில் வெளியாக அனைவரின் பாராட்டுக்களைப் பெற்ற படம்தான் தமிழில் ‘அம்மா கணக்கு’ என ரீமேக் ஆகி வருகிறது.
பெற்றோர்களும், படிக்கும் மாணவ மாணவிகளும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது.
ஜுன் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.