கே.பாக்யராஜின் இயக்கத்தில் சாந்தனு ஜோடியாக ‘சித்து +2’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சாந்தினிக்கு தற்போது தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
பூபதி பாண்டியன் இயக்கத்தில், விமலுடன் ‘மன்னர் வகையறா’, சிபிராஜுடன் ‘கட்டப்பாவை காணோம்’, பரத்துடன் ‘என்னோடு விளையாடு’, ‘வெப்பம்’ படத்தை இயக்கிய அஞ்சனாவின் இயக்கத்தில் ‘பல்லாண்டு வாழ்க’, நடன இயக்குனர் கௌதம் இயக்கத்தில் ‘கண்ணுல காச காட்டப்பா’, இயக்குனர் அமீரின் தயாரிப்பில் ‘டாலர் தேசம்’, தாமி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த சந்தோஷுடன் ‘நான் அவளை சந்தித்த போது’, நவின் கிருஷ்ணா, கீர்த்தி சுரேஷுடன் ‘அய்னா இஷ்டம் நூவு’” எனும் தெலுங்கு படம் என வித்தியாசமான கதைகளங்கள் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது பல படங்களில் இடைவிடாமல் நடித்து வருவதால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார் சாந்தினி.