‘கபாலி’ தமிழில் 22, மலாயில் 29 ரிலீஸ்

இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் உள்ள தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் ஆவலுடக் காத்துக் கொண்டிருக்கும் படமாக ‘கபாலி’ படம் உள்ளது.

படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி எப்போது என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கில் கூட சில முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை ‘கபாலி’ வெளியான பின் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்கள்.

அந்த அளவிற்கு ‘கபாலி’ படம் வசூலிலும் பெரிய சாதனையைப் புரியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ‘கபாலி’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜுலை 22ம் தேதியும், மலாய் மொழியில் ஜுலை 29ம் தேதியும் வெளியாகிறது.

மலாய் மொழி வெளியீட்டு விளம்பரங்களை மலேசியாவின் பல இடங்களில் வைத்துள்ளார்கள். அதில் 29ம் தேதி வெளியீடு என்று குறிப்பிட்டுள்ளதால் தமிழ் படமும் அதே தேதியில்தான் வெளியாகிறதோ என இங்கு குழப்பம் ஏற்பட்டது.

‘கபாலி’ படம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, வட இந்தியா என இந்தியா முழுவதும் மட்டும் 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Read Previous

அட்ரா மச்சான் விசிலு – இசையமைப்பாளரை சிரிக்க வைத்த கூட்டணி

Read Next

Oru Naal Koothu – 25 days & still going strong