ஸ்ரேயாவுக்கு வாய்ப்பு தரும் சிம்பு ?

ஸ்ரேயா, ரசிகர்கள் அதற்குள் அவரை மறந்திருக்க வாய்ப்பில்லை. ‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர். அதன் பின் தமிழில் முதலிடத்தைப் பிடித்து எங்கேயோ போய் விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.

ஆனால், அவருடைய போதாத நேரம் வடிவேலுவுடன் இணைந்து ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார், அவ்வளவுதான், அனைத்து ஹீரோக்களும் அவரை தவிர்க்க ஆரம்பித்தார்கள்.

விஜய், விக்ரம், தனுஷ், விஷால், ஜீவா ஆகியோருடன் ஜோடி சேர்ந்தாலும் கூட அவரால் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியாமல் போனது.

சமீபத்தில் வெளிவந்த ‘தோழா’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்த ஸ்ரேயாவுக்கு தற்போது சிம்பு வாய்ப்பு கொடுக்க உள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் மூன்று நாயகிகளில் ஸ்ரேயாவும் ஒருவராக நடிக்க உள்ளாராம்.

நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகியும் இன்னமும் அதே இளமையுடன் இருக்கும் ஸ்ரேயாவிற்கு சிம்பு படமாகவது திருப்புமுனையைக் கொடுக்கட்டும்.

Read Previous

Producer Thanu confirms Kabali release 22 July

Read Next

பவர் ஸ்டார் ஜோடியாகவும் நடிப்பேன் – நைனா சர்வார்

Most Popular