நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா இருவரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணைந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
‘உள்ளம் கேட்குமே’ படத்தில் அறிமுகமான ஆர்யா தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தவர். அவருக்கும் ‘வனமகன்’ படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை சாயிஷாவுக்கும் திருமணம் என கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தபடி இருந்தன.
இருவரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பரவலாக செய்திகள் வந்தன. ஆர்யா, சாயிஷா இருவரும் இணைந்து ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தார்கள். அடுத்து ‘காப்பான்’ படத்திலும் நடித்து வருகிறார்கள். அப்படத்தின் படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகத் தகவல்.
இது குறித்து எதுவும் சொல்லாமல் இருந்த காதல் ஜோடி, இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ‘‘எங்களது பெற்றோர்கள் ஆசீர்வாதத்துடன், மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். உங்களது வாழ்த்துகள் தேவை” எனக் கூறியுள்ளார்கள்.
புதிய ஜோடிக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Happy Valentines Day 😍 #Blessed 😇 @sayyeshaa pic.twitter.com/WjRgOGssZr
— Arya (@arya_offl) February 14, 2019
Happy Valentines Day! ❤️ pic.twitter.com/5sQfQJARGf
— Sayyeshaa (@sayyeshaa) February 14, 2019