உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘கபாலி’ திரைப்படம் கேரள மாநிலத்தில் ஒரு புதிய வெளியீட்டுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கேரளாவைப் பொறுத்தவரை இதுவரை மம்முட்டி, மோகன்லால் நடித்த படங்கள் அதிகபட்சமாக 200 முதல் 250 தியேட்டர்களில்தான் வெளியாகியுள்ளது.
ஆனால், முதல் முறையாக மலையாளப் படங்களையும் மிஞ்சும் அளவிற்கு ‘கபாலி’ படம் 306 தியேட்டர்களில் நாளை வெளியாகிறது.
மோகன்லால் பட நிறுவனமான மேக்ஸ் லேப்ஸ் மற்றும் ஆன்டனி பெரும்பாவூர் பட நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் இந்தப் படத்தை கேரளாவில் வெளியிடுகிறார்கள்.
இந்தப் படத்துடன் மோகன்லால் – பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஒப்பம்’ படத்தின் டிரைலரும் திரையிடப்படுகிறது. இதனால், மோகன்லால் ரசிகர்கள் ‘கபாலி’ படத்தைத் தவறாமல் பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தொடுபுழாவில் மோகன்லால் மற்றும் ஆன்டனி பெரும்பாவூர் புதிதாகத் திறந்துள்ள ‘ஆசீர்திவாத் சினி பிளக்ஸ்’ல் உள்ள 4 தியேட்டர்களிலும் நாளை முதல் படமாக ‘கபாலி’ வெளியாகிறது.